2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

புனரமைப்பு செய்யப்பட்ட மட்டு. செங்கலடி - பதுளை வீதி கறுத்தப்பாலம் திறப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தையும் பதுளை மாவட்டத்தினையும் இணைக்கும் பிரதான பாதையான செங்கலடி - பதுளை வீதி கறுத்தப்பாலம் புனரமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை காலை மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வை.தர்மரெட்னம், அதிகார சபையின் பிரமத பொறியியலளார் ஏ.சி.நிசாருதீன், மற்றும் திட்ட பொறியியலாளர் ஏ.எம்..சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
மட்டக்களப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை தொர்ந்து இப்பாலம் சேதமடைந்திருந்தது.

இதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்காலிக போக்குவரத்துப்பாதை ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கள் நடைபெற்று வந்தன.

பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்காக 35 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .