2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

காணிக் கச்சேரி

Super User   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் காணி அனுமதி பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் பதிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஈரளக்குளத்தில் நடைபெற்றன.

ஈரளக்குளம் பிரதேசத்தில் 1995 கால பகுதிக்கு முன்னர் காணிகள் அற்றவர்கள் தமக்கென காணிகளை எடுத்துக்கொண்ட போதும் ஆவணங்கள் அற்ற நிலை காணப்படுகிறனர். அத்துடன், காணித் தேவைகள் தொடர்பில் 2008 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவ்வாறனவர்களின் காணி தேவைகள் அவர்களின் பயன்படுத்தும் நிலைகள் குறித்து ஆராயும் முகமாக இந்த காணிகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றன. இந்தக் காணி விசாரணைகளின் போது. பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காணி உத்தியோகத்தர், காணி நிருவாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் ஈடுபட்டனர்.


  Comments - 0

  • vithu Thursday, 04 October 2012 05:08 AM

    இந்த படம் 2010.01.01 இல் எடுக்கப்பட்டுள்ளதே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .