2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

புதிதாக மதுபானசாலை திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக மதுபானசாலை திறப்பதை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இப்பிரதேசத்தில் ஏற்கனவே ஐந்து மதுபானசாலைகள் காணப்படுவதால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இப்பகுதி ஏழைகள் நாளாந்தம் மதுவுக்கு அடிமையாகி பல்வேறு சமூக பொருளாதார காலாசார சீரழிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜாவிடம்  புதிய மதுபானசாலை திறப்பதை தடை செய்யுமாறு கோரி மகஜர்களை பொது அமைப்புக்கள் கையளித்தன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் அரியநேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .