2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அனர்த்த நிலைமைகள் தொடர்பான கருத்தரங்கு

Super User   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜிப்ரான்)


அனர்த்த நிலைமைகள் தொடர்பான கருத்தரங்கொன்று வானிலை அவதான நிலைய பிரதி பணிப்பாளர் நாயம் எஸ்.ஆர்.ஜெயசேகரவால் இன்று புதன் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடுத்தில் நடத்தப்பட்டது.

இதில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், உதவி மாவட்ட செயலாளர் வாசுதேவன், மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே.சூரியகுமாரன், மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ அலகுப் பொறுப்பாளர் இன்பராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த கருத்தரங்கில் காலநிலை மாற்றம், மினி சூறாவளி, சுனாமி, வானிலை பற்றிய விளக்கமின்மைகள் தொடர்பான தெளிவுபடுத்தல்கள், சூறாவளி, அனர்த்த வேலைப் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு வானிலை நிலைய பிரதி பணிப்பாளர் விளக்கமளித்தார்.

இதன்போது, சமூகசேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் பிரதிநிதிகள், பட்டதாரி பயிலுனர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .