2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டு. உயர் தொழில்நுட்பவியல் கட்டிடப் பணி இவ்வருடத்துக்குள் பூர்த்தி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


ஜனாதிபதியின் வழிகாட்டலில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ், 14 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்திற்கான நிர்வாகக்கட்டிட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்  பூர்த்தியடையும் என   நிறுவகத்தின் இணைப்பாளர் கே.ஜெயபாலன்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் அமைந்துள்ள இந்தக் கல்வி நிறுவகத்தில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் 450 மாணவர்கள் பல்வேறு கற்கைநெறிகளை பயின்றுவருகின்றனர்.
இவர்களுக்கான நிரந்தரக் கட்டிடம் இல்லாமை குறித்து மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .