2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மாணவர்களுக்கான ஊடகமும் தொடர்பாடலும் கருத்தரங்கு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


இலங்கை பத்திரிகை ஸ்த்தாபனத்தின் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் மட்டக்களப்பில் இன்று காலை பாடசாலை மாணவர்களுக்கான ஊடகமும் தொடர்பாடலும் எனும் தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கு மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கான இக் கருத்தரங்கின் ஆரம்ப வைபவம் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி இம்றான் புர்கான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன், மட்டக்களப்பு மத்தி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.சிறிதரன், டெய்லிமிரர் பத்திரிகையின் ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.ஐயூப், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தமிழ் பிரிவு முறைப்பாட்டு அதிகாரி அமீர் ஹுஸைன் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு தேவையான ஊடக கல்வி தொடர்பான நூல்களும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி இம்றான் புர்கானினால் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இக் கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளைச் சேர்ந்த 180 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இக் கருத்தரங்கு இன்று முழு நாளும் நடைபெறவுள்ளதாக இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி இம்றான் புர்கான் தெரிவித்தார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .