2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வாழும் கலை அமைப்பின் முதலாவது தேசிய மாநாடு

Super User   / 2012 ஒக்டோபர் 14 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


வாழும் கலை அமைப்பின் முதலாவது தேசிய மாநாடு மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் அமைப்பின் இணைப்பாளர் யசோதா சிவபாதசுந்தரம் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்பொருள் ஆய்வாளருமான க.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு கல்வி பணிப்பாளர் பவளகாந்தன், கல்குடா கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வானது இலங்கையில் முதல்முறையாக நடத்தப்படுவதுடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவர்களின் நலன்கருதி 20 நிமிடங்களில் என்னும் மன அழுத்தத்தை தடுக்க, ஆரோக்கியத்தையும் புத்துணர்ச்சியையும் அதிகரிக்க என்னும் திட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

பெண்களின் கல்வி முன்னேற்றம்,சிறுவர் சிறுமியர் தமது எதிர்கால கல்வியை தேர்வுசெய்து அத்திபாரமிடல் தொடர்பில் ஆய்வரங்குகள் நடத்தப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .