2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித், ஏ.எச்.ஏ. ஹுசைன்)


மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்துக்கு அருகிலிருந்து ஆயுதத்தொகுதி ஒன்றினை பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை மீட்டுள்ளனர்.

சத்துருக்கொண்டான் பிரதேச சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளினால் யுத்தகாலத்தில் இவ் வெடிப்பொருட்கள் இங்கு மறைத்து வைத்திருக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .