2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கிழக்கு பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகும்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி,ஜிப்ரான்)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை புதன்கிழமை காலை ஆரம்பமாகுமென கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தெரித்தார்.

கடந்த 3 மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாளை புதன்கிழமை காலை கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் அனைவரும் பல்லைக்கழகத்திற்கு சமூகமளிப்பதோடு வகுப்புக்களுக்கும் சமூகமளிக்குமாறு உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கேட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .