2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அமீர் அலிக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்படும்: அமைச்சர் பசில்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அமீர் அலிக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் பிரதி அமைச்சர் பதவியும் மிக விரைவில் வழங்கப்படுவது உறுதி என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுடனான கலந்துரையாடலொன்று மௌலவி எம்.ஏ.சி.எம்.ஜூனைட் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் 19 ஆசனங்களைப் பெற்றிருந்தால் இன்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை அலங்கரித்திருப்பது இன்று இருக்கும் முதலமைச்சர் அல்ல. கல்குடாத் தொகுதி பிரதிநிதி அமீர் அலிதான் என்பதற்கு மாற்றுக் கருத்திற்கிடமில்லை.

அமீர் அலியும் கல்குடாத் தொகுதி மக்களும் இந்த அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மிக விரைவில் அமீர் அலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அதனுடன் பிரதி அமைச்சர் பதவியும் வழங்குவதுடன் அக் கொண்டாட்டத்தை இப் பாள்ளிவாயலில் கொண்டாடும் போது அதில் நானும் கலந்து கொள்வேன்.

இனவாதம், மதவாதம் பேசி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சிலர் நினைத்த போது அமீர் அலி தலைமையிலான இப்பகுதி மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், பிரதேச சபைத் தேர்தல்களில் எல்லாம் எமது கட்சி வெற்றி பெற முன்னின்று உழைத்த அமீர் அலிக்கு நானும் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அதனுடன் பிரதி அமைச்சர் பதவியும் வழங்கி அவரையும் இப் பிரதேச மக்களையும் கௌரவப்படுத்துவோம் என்றும் கூறினார்.

இக் கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் ஓட்டமாவடி வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.






  Comments - 0

  • meenavan Wednesday, 17 October 2012 07:12 AM

    அமீர் அலிக்கு பிரதி அமைச்சர் பதவி ....மு.கா.வுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசு வைக்கும் சதுரங்க செக் மேட்....பொருத்தம் தானே?

    Reply : 0       0

    பட்டாஸ் பாலு Wednesday, 17 October 2012 10:51 AM

    ஏன் முதலமைச்சர் பதவிக்கு அவர் தகுதியானவர் என்றால் முழு அமைச்சர் பதவியை கொடுத்தால் என்னவாம்...? அல்லது இப்போதுள்ள இலாகா இல்லா சிரேஸ்ட அமைச்சர் பதவியை கொடுத்திட்டால் போச்சு. வேலையில்லாமல் குந்திக் கொண்டிருப்பார். சோ சொல்வது போல அப்பப்போது திறப்பு விழாக்களில் கலந்துகொண்டால் சரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .