2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சுகாதார விழப்புணர்வு செயலமர்வு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் யுனிசப் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் சுகாதார வேலைத்திட்டத்தின் கீழ் சுகாதார விழப்புணர்வு செயலமர்வொன்று பூநொச்சிமுனையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.றபீக் மற்றும் ஏ.எல்.றஹ்மத்துல்லா உட்பட பூநொச்சிமுனையிலுள்ள குடும்ப தலைவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சுகாதார நடைமுறைகள் தொடர்பாக உரையாற்றப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .