2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

திவிநெகும நான்காம் கட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், ரி.லோஹித்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும திட்டத்தின் நான்காம் கட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனடிப்படையில், ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிலும்  காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

புதிய காத்தான்குடியில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார பணிப்பாளர் எம்.நடேசராசா மற்றும் காத்தான்குடி பிரதேச செயலளார் எஸ்.எச்.முசம்மில்,  காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமில் பணிப்பாளர் எம்.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் மனோகிதராஜ், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் உட்பட
பலர் கலந்துகொண்டனர்.

ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இத்திட்டமானது 345 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .