2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பட்டதாரிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைந்துக் கொள்வதற்கான நியமனம் வழங்கல்

Super User   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், ஜிப்ரான், up.Nyh`pj;)


பட்டதாரி பயிலுநர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைந்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் இடம்பெற்றது.

ஏறாவூர் பிரதேச செயலகத்தில் பயிலுநர்களாக பணியாற்றி வந்த 24 பட்டதாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.

ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபையின் உப தவிசாளர் எம்.எஸ்.எம். சுபையிர் உள்ளிட்டோர் அதிதிகளாக  கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் விவசாயிகளுக்கான பயிர் விதைகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான உடற்பயிற்சி சாதனங்களும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதும் பட்டதாரி பயிலுநர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைந்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டன.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு, களுவாஞ்சிக்குடி, பட்டடிப்பளை மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுளை சேர்ந்த 162 பட்டதாரிகளே பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும்  வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களிலும் நியமனம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றுது.

பிரதேச செயலாளர்களான ஆர்.ராகுலநாயகி மற்றும் தி.கொளரி ஆகியோர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமன கடிதங்களை வழங்கினர்.

வாகரைப் பிரதேச செயலகத்தில் 24 பட்டதாரி பயிலுனர்களும் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் 21 பட்டதாரி பயிலுனர்களும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 

    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .