2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தாழங்குடா பனங் கைப்பனி கிராமமாக தெரிவு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் அவரது ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா கிராமம் பனங் கைப்பனி கிராமமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் மேற்படி அமைச்சின் கீழுள்ள பனை அபிவிருத்தி சபையினால் பனங்கைப்பனிப் பொருட்கள் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையில் இந்த கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள விதவைகள் மற்றும் கணவனினால் கைவிடப்பட்ட பெண்கள், வாழ்வாதாரத்தை எதிர்பார்த்திருக்கும் பெண்களை கொண்ட 200 பயணாளிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தவகையில் இவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியொன்று தாழங்குடாவிலுள்ள சேவாலங்கா நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த தலைமைத்துவ பயிற்சி நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்க முகாமையாளர் கே.கேபாலகிருஷ்னன்,  சிறுசுவடுகள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி.பவானி, இதற்கான பொறுப்பாசிரியை திருமதி பற்றிக்கா உட்பட அதன் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இத் திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பனங் கைப்பனிப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படு வருதுடன் இந்த கிராமம் இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அத்துடன் இத்திட்டம் தாழங்குடா கிராமத்திலும் யாழ்ப்பானத்தில் மாசியப்பட்டி கிராமத்திலும் இடம்பெற்று வருவதாக பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் முகாமையாளர் கே.கேபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த திட்டத்திலுள்ள பயணாளிகளின் ஆளுமை விருத்தியை மேற்கொள்ளும் பொருட்டு இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .