2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் 'சிறந்த விவசாயிகளுக்கான விருது' வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாhகண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் உள்ளிட்டோர்; கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் சிறந்த விவசாயிகளாக தெரிவுசெய்யப்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டதோடு விவசாய உபகரணங்களும், உரம் மற்றும் பயிர் விதைகளும் வழங்கப்பட்டன.

இதன்போது, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.



  Comments - 0

  • unmai Thursday, 25 October 2012 01:57 AM

    நல்ல மருந்து அடிங்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .