2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 24 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை கற்பொக்கணிக் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மிகவும் வறிய மக்களுக்கான சுவிடன் கூட்டுறவு நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

சுவிடன் கூட்டுறவு நிறுவனத்தின் கிழக்கு மாகாண முகாமையாளர் மயூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் வெ.தவராசா, சுவிடன் கூட்டுறவு நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் வீரபத்திரண, வவுணதீவு  பிரதேச சபை தவிசாளர் க.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தலா ஏழு இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட  24 வீடுகளே கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .