2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் குறைபாடுகளை தீர்ப்பேன்: மாகாண அமைச்சர்

Super User   / 2012 ஒக்டோபர் 25 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்திலுள்ள குறைபாடுகளை தனது பதவிக் காலத்துக்குள் தீர்த்து வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானிலுள்ள மாகாண விவசாய திணைக்களக் காரியாலயத்துக்கு நேற்று புதன்கிழமை  அமைச்சர் நஸீர் அஹமட் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, விவசாயத் திணைக்களக் காரியாலயத்தினால் அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, மாகாண விவசாயக் காரியாலயத்தில் கடமையாற்றுவோரின் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. திணைக்களத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகள் மற்றும் குறைகளையும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .