2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆரையம்பதியில் மானிய உரம் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி கமநல கேந்திர நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில இவ்வாண்டு பெரும்போக செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு மானிய உரம் வழங்கும் நிகழ்வு நேற்று ஆரையம்பதி கமநல கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.

இதில் ஆரையம்பதி கமநல கேந்திர பெரும்பாக உத்தியோகஸ்தர் திருமதி ஸ்ரீ பிரதீப் இனோக்கா நிசாந்தி விவசாயிகளுக்கான மானிய உரத்தினை வழங்கி வைத்தார்.

இதில் விவசாய போதனாசிரியைகள், கமநல அமைப்புக்களின் தலைவர்கள் மற்றம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆரையம்பதி கமநல கேந்திர நிலைய பிரிவில் 800 ஏக்கரில் பெரும்போன செய்கையில் இடுபடவுள்ள  விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 116 கிலோ உரம் மானியமாக வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .