2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

காத்தான்குடியில் சிறுவர்களுக்கான பெருநாள் பஸார்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


22 வருடங்களுக்கு பின்பு காத்தான்குடி பிரதான வீதியில் இன்று சிறுவர்களுக்கான பெருநாள் பஸார் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதான வீதிலுள்ள பஸ்மலா சதுக்கத்தில் நடைபெறும் சிறுவர்களுக்கான இப்பெருநாள் பஸாரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் கோவில்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் அல்லிஸ் உட்பட பிரமுகர்கள் திறந்து வைத்து பெருநாள் பசாரை ஆரம்பித்து வைத்தனர்.

அஷ்ஷெயித் ஷெயின் மௌலானா பள்ளிவாயல் நிருவாகத்தினால் நடாத்தப்படும் இப் பெருநாள் பசார் மூன்று தினங்களுக்கு நடைபெற்று 29ஆம் திகதி திங்கட்கிழமை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .