2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஓட்டமாவடியில் தேசிய விலங்கு உணவு தினம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 03 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


தேசிய விலங்கு உணவு தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பால் நுகர்வினை அதிகரிக்கும் நோக்குடன் நல்லினப் புற்களை நட்டு அதனூடாக கால்நடைகளின் உணவுத் தேவைகளை தரிசு நிலங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்காக புல் வளர்ப்பினை ஊக்குவிக்கும் திட்டத்தில் பண்ணையாளர்களுக்கு நல்ல இன புல் வேளாண்மை வழங்கப்பட்டதுடன்  ஓட்டமாவடி கால்நடை வைத்திய அதிகாரி பிரிவில் சிறந்த கால்நடைப் பண்ணையாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஓட்டமாவடி கால்நடை வைத்திய அதிகாரி ஆர.டி.எம்.எச்.மதுமாலா தலைமையில் மாஞ்சோலை பதுரியா நகர் அர் ரஹ்மான் குர்ஆன் கலாசாலை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், வாழைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி டி.ரீ.வின்சன், கால் நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எம்.றமீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .