2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆயுதங்களை ஒப்படைக்குமாறு மட்டக்களப்பில் சுவரொட்டிகள்

A.P.Mathan   / 2012 நவம்பர் 03 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்போர் உடனடியாக அவற்றை கையளிக்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதங்கள் வைத்திருப்போர் அல்லது ஆயுதங்களை தமது வதிவிடங்களில் கண்டோர் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது படை முகாம்களுக்கோ தெரியப்படுத்தி வெகுமதிகளை பெற்றுக் கொள்ளுமாறு அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளையோ அல்லது துப்பாக்கியின் உதிரிப்பாகங்களையோ வெடி பொருட்களையோ வைத்திருப்பது சட்ட விரோதமாகும் எனவும் அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்கள் கண்டறியப்பட்டால் பிணையில் வரமுடியாத தடுப்புக்காவல் வழங்கப்படும், இதன் காரணமாக தடுப்பில் இருப்பவரின் குடும்பம் வாழ வழியின்றி தவிக்கும் நிலையேற்படும்.

கண்டெடுத்த துப்பாக்கிகளையோ அல்லது ஏதேனும் ஆயுத உபகரணங்களோ வைத்திருந்தால் அல்லது வதிவிடத்தில் எங்காவது கண்டிருந்தால் அருகிலுள்ள படை முகாமுக்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ தெரியப்படுத்தி அதற்குரிய வெகுமதிகளை பெற்றுச் செல்லுங்கள்.

ஆயுதங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கினால் அவற்றை பாதுகாப்பு படையினர் கவனமாக அகற்றுவர் என அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை தெரியப்படுத்துவதற்கான தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வெகுமதி தொகை என்பனவும் அப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த பிரசுரம் யாரால் வெளியிடப்பட்டுள்ளது போன்ற விபரங்கள் எதுவும் இப்பிரசுரத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .