2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டக்களப்பில் புற்றுநோய் கொடிவாரம்

Kogilavani   / 2012 நவம்பர் 05 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு புற்றுநோய் சங்கம் ஏற்பாடு செய்திருந்த புற்றுநோய் கொடிவாரம் இன்று மட்டக்களப்பு மகாஜனாக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு புற்றுநோய் சங்கத்தின் தலைவரும் பல்வைத்திய நிபுணருமான டாக்டர் கே.சயலொளிபவான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாhள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

முதலாவது கொடி மாவட்ட அரசாங்க அதிபருக்கு அணிவிக்கப்பட்டதுடன் கொடிவார நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம், கிழக்குபல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி கே.கருணாகரம் உட்பட  வைத்திய அதிகாரிகள்  பலரும்  பாடசாலை மாணவர்களும் சமுகசேவையாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்மூலம் கிடைக்கும் நிதி மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

புற்றுநோய் கொடி வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை அனுஷ்டிகப்படவுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .