2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் பதாகைக்கு சேதம் விளைவிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 24 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு நாவற்குடா, கல்லடி பகுதிகளில் பிரதான வீதியில் கட்டப்பட்டிருந்த ஜனாதிபதியின் உருவப் படம் தாங்கிய பதாகைகள் இன்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு கல்லடியில் நாளை  நடைபெறவுள்ள நிகழ்வொன்றுக்காக இந்த பதாகைகள் மட்டக்களப்பு கல்முனை பிரதான விதியிலுள்ள நாவற்குடா மற்றும் கல்லடி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .