2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பிள்ளைகளின் இறப்பு வீதத்தை குறைக்க மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 24 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


'ஒன்றிணைவோம் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் இறப்பு வீதத்தை குறைப்போம்' எனும் தொனிப்பொருளில் மக்களை விழிப்புணர்வூட்டும் பேரணி மற்றும் கருத்தரங்கு வேள்ட் விஷன் மட்டக்களப்பு கிரான் பிராந்திய சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் கிரான் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

ஐந்து வயதுக்கட்பட்ட குழந்தைகளின் போசாக்கு மேன்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டுவதுடன் தொற்றக் கூடிய மற்றும் தொற்றாத நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது குறித்து விழிப்புணர்வூட்டுவது இந்த பேரணியின் நோக்கம் என வேள்ட் விஷன் நிறுவன கிரான் பிராந்திய சுகாதாரதுறை அணைப்பாளர் எஸ்.பெஞ்ஜமின் தெரிவித்தார்.

கிரான் நாற் சந்தியிலிருந்து ஆரம்பமான இப்பேரணி பிரதான வீதியூடாக உவெஸ்லி மண்டபத்தை சென்றடைந்ததோடு அங்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கும் நடைபெற்றது.
 
' குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு வழிசமைப்போம்', 'உங்கள் ஆராக்கியம் சமூகத்தின் ஆரோக்கியம்', 'ஆரோக்கிய வாழ்வே ஆனந்த வாழ்வு', 'என் குழந்தையே எனது சொத்து', 'எனது பெற்றோரே எனது போசாக்கிற்கு முக்கிய காரணம்', 'நோய் அரக்கனின் எதிரி போசாக்கான உடல்' 'ஒவ்வொரு ஆண்டும் 6.9 மில்லியன் பிள்ளைகள் 5 வயதை அடைய முன்னரே இறக்கிறார்கள்' போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை பேரணியில் கலந்துகொண்டோர் ஏந்திச் சென்றனர்.
 
வேள்ட் விஷன் நிறுவன கிரான் பிராந்திய சுகாதாரதுறை இணைப்பாளர் எஸ்.பெஞ்ஜமின் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கிரான் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எஸ்.இளங்கோ, பொதுச் சுகாதரப் பரிசோதகர்கள், குடும்பநல உத்தியேகஸ்தர்கள், வேள்ட் விஷன் கிழக்கு பிராந்திய சுகாதார பொறுப்பளார் பி.லோகிதராஜா, கிரான் பிரதேச திட்ட முகாமையாளர் எஸ்.பி.பிறேமசந்திரன், பொருளாதார அபிவிருத்தித் திட்ட இணைப்பாளர் ஜே.ஆர்.அகிலானந்தன், சிறுவர் தாவரிப்பு திட்ட இணைப்பாளர் இந்து றோகாஸ், கல்வித் திட்ட இணைப்பாளர் பி.ஜெகன், முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
கிரான் சுகாதார வைத்திய பிரிவில் 30 சதவீதமான பிள்ளைகள் குறைபோசாக்குடன் காணப்டுவதாக பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எஸ்.இளங்கோ தொரிவித்தார்.
 
சுமார் 25 சதவீதமான பிள்ளைகள் வயதுக்கு ஏற்ற உயரம் குறைவாகவும், 20 சதவீதமான பிள்ளைகள் உயரத்திற்கு ஏற்ற நிறை குறைவாகவும் காணப்படுகின்றன. கிரான் சுகாதார வைத்திய பிரிவில் முறுத்தாணை மற்றம் வாகனேரி பிரதேசங்களிலேயே போசாக்கு சம்மந'தமான பிரச்சினைகள் அதிகம் காணப்படுவதாகம் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
கருத்தரிதால் முதல் ஒரு குழந்தை ஐந்து வயதை பூர்தியடையும் வரை பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள் தொடர்பாக குடும்பநல உத்தியோகஸ்தர்கள் விளக்கமளித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .