2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வீட்டு வசிதிகளை ஏற்படுத்தி தருமாறு கச்சக்கொடி சுவாமிமலை கிராம மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்தித்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை கிராம மக்கள் தமது அடிப்படை தேவையான வீட்டு வசிதியை ஏற்படுத்தி தருமாறும் காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்தும் தம்மை விடுவிக்கும்படியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடுக்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் மக்கள் நீண்ட காலமாக குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கும் தாம் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானை ஒன்று கிராமத்திலுள்ள தகரவீடு ஒன்றினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக  அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் காட்டு யானைகளின் அட்டகாசங்களுக்கு மத்தியில் ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வரும் எம்மீது அதிகாரிகள் இனிமேலாவது அக்கறை செலுத்துவார்களா? என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .