2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வாழைச்சேனையில் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை வாழைச்சேனை பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய நடமாடும் சேவை வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்றN இந்நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிகச் செயலாளர் கே.விமலநாதன், சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவையின் இணைப்பாளர் பி.ஜெயபாரதி ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது, காலங்கடந்த பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொண்டதுடன் பதிவுகளும்
வழங்கப்பட்டன.

புதிய மற்றும் காணமல்போன தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், மோட்டார்; போக்குவரத்து திணைக்களத்தால் சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல், காணிப் பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் தீர்வு கண்ட காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொலிஸ் முறைப்பாடு மற்றும் சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

விண்ணப்பங்களுக்கான முத்திரைக் கட்டணம் மற்றும் தேசிய அடையாள அட்டை, முதியோருக்கான அடையாள அட்டை என்பவற்றுக்கான புகைப்படம் என்பற்றை சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை யுஎஸ்எயிட் நிதி உதவியில் இலவசமாக வழங்கியது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகம்தோரும் நடமாடும் சேவை நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .