2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

காத்தான்குடி பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திடிர் விஜயம்

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேசத்தின் ஊர் வீதியில் அமைந்துள்ள 'காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம்',  'காத்தான்கடி ஸாவியா வித்தியாலயம்',  'காத்தான்குடி மில்லத் மகளிர் பாடசாலை' ஆகிய மூன்று பாடசாலைகளுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.எம்.சிப்லி பாரூக் தீடிர் விஜயமொன்றை கடந்த இரு தினங்களாக மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன்போது, பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில்; கேட்டறிந்துகொண்டதோடு  பற்றாக்குறையாக  காணப்படும் பௌதீக வளங்கள் அபிவிருத்தி, பௌதீக வளங்கள் குறைபாடுகளால் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தரம் 1 இல் மாணர்களை சேர்த்துக்கொள்வதிலுள்ள சிரமங்கள், மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான  பங்களிப்புகள் பற்றியும் மாகாண சபை உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார்.

இதேவேளை, 'கல்வியே முதன்மை' எனும் நன் நோக்கில் பாடசாலைகளின் பிரச்சினைகளை நேரில் சென்று கண்டறியும் போது அவை தொடர்பில்  பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உதவியுடனும்  மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலமும் பெறப்படும் நிதிகளை கொண்டு பாடசாலையின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் பாடசாலை இதன்போது அவர் உறுதியளித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .