2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

எனது ஆதரவாளர்களை அச்சுறுத்துகின்றனர்: அரியநேத்திரன்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களை புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,

'கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள எனது ஆதரவாளர்களின் வீடுகளுக்குச் சென்ற புலனாய்வுத்துறையினர் எனக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் இளைஞர்களை மிரட்டியுள்ளனர்.

மாவீரர் தினத்தையிட்டு நிகழ்வுகளை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தயாராகி வருவதாகவும் அதற்கு உதவினால் உங்களை கைதுசெய்து நான்காம் மாடிக்கு அனுப்புவோம் என்று மிரட்டிவருகின்றனர்.

மாவீரர் தினத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தல்; மற்றும் நிகழ்வுகளை அவர் ஏற்பாடு செய்து  இருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் உங்களைதான் கைதுசெய்வோம் என்றும் இளைஞர்களை மிரட்டியுள்ளனர்.

புலனாய்வுத்துறையினரின் இவ்வாறான செயற்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்களை மிரட்டுவது நாடாளுமன்ற உறுப்பினராகிய எனக்கு அச்சுறுத்தல் விடுவதாகவே கருதவேண்டியுள்ளது.

மக்கள் மறந்துவரும் விடயங்களை படையினர் ஞாபகமூட்டி மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்' என்றார்.

  Comments - 0

  • Sumathy m Sunday, 25 November 2012 02:11 PM

    எமது இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி, உசுப்பேத்தி முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போய் விட்டவர்கள் நீங்களும் உங்களது சகாக்களும். இது தான் பழைய கதை என்றால், இப்பவும் அதையே செய்கின்றீர்கள். அது இருக்கட்டும், நடாளுமன்ற உறுப்பினர் என்றால் என்ன கொம்பா? நாடாளுமன்ற உறுப்பினரின் உயிர் என்றால் மற்றவர்களை விட உயர்ந்ததா? அறிக்கை விட்டு வாக்கு கொள்ளையடிக்கும் செயலை விட்டு இனியாவது எங்கட சனத்துக்கு உருப்படியா ஏதாவது செய்யுங்கோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .