2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

காத்தான்குடி நகர சபையின் புதிய உறுப்பினர் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

Super User   / 2012 நவம்பர் 25 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எம்.எச்.ஏ.நசீர் அண்மையில் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு புதிய காத்தான்குடி நூராணியா ஜும்ஆ பள்ளிவாயலில் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்  பின்னர் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூரா சபை முக்கியஸ்தர்களான அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி), அஷ்ஷெய்க் சபீல் நளீமி, மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஹாறூன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீளழைத்தல் கொள்கைக்கு அமைவாக காத்தான்குடி நகரசபை உறுப்பினர் பதவியிலிருற்து பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கடந்த செப்டம்பர் மாதம் இராஜினாமா செய்திருந்தார். இந்த வெற்றிடத்திற்கே நசீர் காத்தான்குடி நகர சபை உறுப்பினராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .