2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஆயித்தியமலை பிரிவில் குற்றச் செயல்கள் குறைவு: பதில் பொலிஸ் அத்தியட்சகர்

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

'ஆயுத வன்முறைகள் இடம்பெற்ற கடந்த காலப் பாதிப்புக்களினால் தற்போதும் ஆயித்தியமலைப் பிரதேச மக்கள் பெரும் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற போதிலும் அவர்கள் சமாதானத்தை விரும்புபவர்களாக இருக்கின்ற படியால் இந்தப் பகுதியிலே குற்றச் செயல்கள் இடம்பெறுவது மிக மிகக் குறைவாக இருக்கின்றது'  என்று மட்டக்களப்பு மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்கர் எம்.எஸ்.என். மென்டிஸ் தெரிவித்தார்.

சிவில் பாதுகாப்புக் குழுக்களை வலுப்புடுத்தும் மீளாய்வுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவிலுள்ள மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ஆயித்தியமலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எஸ். பண்டாரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உன்னிச்சை இராணுவ கட்டளை அதிகாரி ஹெட்டிகே உட்பட மேலும் பல பாதுகாப்பு அதிகாரிகளும் சிவில் குழுக்களின் பிரதிநிதிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவின் கீழ் வரும் பொது மக்கள் பொலிஸாருடனும் பாதுகாப்பு தரப்பினருடனும் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதால் குற்றச் செயல்கள் இங்கே இடம்பெறாத வண்ணம் தங்களது பிரதேசத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள்.

இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மொத்தமாக 44 இடம்பெற்றிருக்கின்ற அதேவேளை ஆயித்திய மலைப் பொலிஸ் பிரிவில் ஒரேயொரு சம்பவமே இடம்பெற்றிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் குற்றச் செயல்கள் மிகக் குறைவாக இடம்பெறும் பகுதி ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவாகும் என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .