2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மங்களராமய விகாரையில் தங்குமிட கட்டிடம் திறப்பு

Super User   / 2012 நவம்பர் 25 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)


மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாத்திரிகர்கள் தங்குமிட கட்டிடம் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோவின் தலைமயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ இணைப்பதிகரி பிரிகேடியர் சுதத் திலகரட்ண உட்பட பலர்; கலந்துகொண்டனர்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் 20 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் யாத்திரிகள் தங்குமிடம்,  மலசலகூடம், குளியளைறை மற்றும் நீர்த்தாங்கி என்பன இந்த விகாரையில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .