2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 26 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


வாகரை பொலிஸாரின் ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம் வாகரை மகாவித்தியாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது சிவில் பாதுகாப்புக்குழுவினரின் முக்கியத்துவமும் அவர்களுக்கான கடமைகள மற்றும்; பொறுப்புக்கள் பற்றியும் பொதுவான பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

வாகரை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரீ.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த மீளாய்வுக் கூட்டத்தில், வாழைச்சேனை மற்றும் வாகரை பிரிவுகளுக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ரத்னசூரிய, கிராம அலுவலகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வாகரை பிரதேச இராணுவ மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள், வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 14 கிராம அலுவலகர்; பிரிவுகளைச் சேர்ந்த கிராம மட்ட சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பிரதேச மட்ட சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கான அனுசரணையை எஸ்கோ நிறுவனம் மற்றும் ஆசிய அமைப்பினரும் வழங்கினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .