2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'மனிதநேய பணிகளில் பொறுப்புக் கூறும் பங்காளித்துவம்' செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 26 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)

'மனிதநேய பணிகளில் பொறுப்புக் கூறும் பங்காளித்துவம்' என்ற தொனிப் பொருளிலான  செயலமர்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கதிரவெளி கிரீன்ஹவுசில் நடைபெற்றது.

முஸ்லிம் எய்ட் அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து பங்காளிகளாக செயலாற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலநறுவையைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன் இச்செயலமர்வு நடைபெற்றது
இச்செயலமர்வில் 12 நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

முஸ்லிம் எய்ட் நிறுவனமானது இலங்கையின்; பல பாகங்களிலும் மனிதாபிமான செயற்பாடுகளில் இன, மத பேதமின்றி மனித விழுமியங்களுக்கு ஏற்ப செயற்பட்டு வரும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகும்.

இக்கலந்துரையாடலில், இந்நிறுவனத்தின் இலங்கை, இந்திய, பங்களாதேஸ், பாகிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கான இணைப்பாளர் முஷர்ரப்கான், முஸ்லிம் எய்ட் கொழும்பு தலைமை காரியாலய அதிகாரி முகம்மட் முஸம்மில், அப்துல் ஆகியோர் பங்கு பற்றி எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றி விளக்கமளித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .