2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சடலம் மீட்பு

Super User   / 2012 நவம்பர் 26 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

வவுணதீவு, கன்னன்குடா ஆற்று பகுதியில் ஆணெருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

காயங்குடா, கன்னனன்குடா பகுதியை சேர்ந்த 67 வயதான கணபிள்ளை சிவகுரு என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைகக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
ஆஸ்மா நோயாளியான இவர் ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .