2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடம்

Kogilavani   / 2012 நவம்பர் 27 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜிப்ரான்)


மஹிந்தோதய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வாகரை- கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

வித்தியாலத்தின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

இதன்போது உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்,

'எட்டு வகையான கூடங்களை உள்ளடக்கியதாக அமையப்பெறும் மேற்குறித்த ஆய்வு கூடமானது வாகரைப் பிரதேசத்தின்  கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயத்திற்கு கிடைத்திருப்பதானது உண்மையில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கான ஓர் வரப்பிரசாதமாக அமையும்.

வெறுமனே கட்டிடங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டிராமல் பெறுமதியான பெறுபேறுகள் மற்றும் ஆக்கபூர்வமான  செயற்படுத்தல்கள்  ஊடாக தொடர்ந்து கல்வியிலே வளர்ந்து வருகின்ற ஓர் சமூகமாக இப் பிரதேச மக்கள் அதாவது மாணவர்கள் திகழ வேண்டும்' என தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .