2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஆய்வு கூடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 நவம்பர் 27 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட களுதாவளை மற்றும் துறைநீலாவணையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வுகூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்கமைவாக, சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் களுதாவளை மத்திய கல்லூரியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ளது. 

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அலோசியஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

அத்துடன் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சிவநாதன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சகல வசதிகளையும் கொண்ட ஆய்வுகூடத்துக்கான அடிக்கல நடப்பட்டது. இதேபோன்று துறைநீலாவனை மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான அடிக்கல் நடப்பட்டது.

80 இலட்சம் ரூபா செலவில் இந்த ஆய்வுகூடம் அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .