2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கிராமிய அபிவிருத்தி வங்கி மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் சந்தானம், மட்டக்களப்பு கிராமிய அபிவிருத்தி வங்கி முகாமையாளர் சத்தியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது போரதீவுப்பற்றின் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 38 பயனாளிகளுக்கான சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

போரின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதனோடு இணைந்ததாக வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களும் அரசினால் பூர்த்திசெய்யப்பட்டுவருவதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் இதன்போது தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .