2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

Super User   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

நண்பர்களுடன் ஏறாவூர், புன்னைக்குடா கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போன மாணவன் நேற்று சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

இறந்தவர் ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் கௌதன் ராஜா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் ஸ்தலத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையில் ஈடுபட்டார். இதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி காமினி ஜயவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் காணாமல் போன சிறுவனின் சடலத்தைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தனர். தேடும் பணியில் திருகோணமலையில் இருந்து வந்திருந்த கடற்படையினரும் உதவியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .