2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கணினி விற்பனை நிலையத்தில் திருட்டு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பில் உள்ள கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை நிலையம் ஒன்றில்  5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டுப் போயுள்ளதாக அந்தக் கடையின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள மேற்படி விற்பனை நிலையத்திலேயே திருட்டுப் போயுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்படி கடையை  உடைத்து இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக நேற்று பகல் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .