2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

'றிஸ்வி' நகர் கடற்கரை பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், ரி.லோஹித்)

காத்தான்குடி நகர சபை, றிஸ்வி நகர் கடற்கரை பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரவித்து றிஸ்வி நகர் கிராம மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர சபையின் வாகனங்கள் குப்பைகளை கொட்டுவதற்காக இவ்விடத்திற்கு வந்தபோது அதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதுடன் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர சபையினால் கொட்டப்படும் குப்பைகளினால் இப்பகுதியின் சுகாதாரம் சீர்கெடுவதாகவும் சூழல் மாசாதடைவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

குப்பை கொட்ட கோடிகளை வசூலித்து நீங்கள் செய்தது என்ன?', 'நகர முதல்வரே சூழலை அழகு படுத்த பாடுபடும் நீங்கள் எங்களின் குழந்தைகளின் சுகத்தை காப்பாற்றுங்கள்', 'நகர சபையே இங்கு குப்பைகளை கொட்டுவதை உடன் நிறுத்த வேண்டும்' போன்ற சுலோகங்களை ஆர்பாட்டக்காரர்கள் தாங்கி நின்றனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இக்கிராம மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

'இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஷ்பரிடம் கேட்ட போது, காத்தான்குடி நகர சபை பிரிவில் திண்மக்கழிவகற்றலுக்ககா காணி கொள்வனவு செய்யப்பட்டு திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக முறையான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வேலைகள் நிறைவடைந்தவுடன் இந்த பிரதேசத்தில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்படும். தற்போது இந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர் கேடுகள் இருந்தால் அவற்றை துப்பரவு செய்து வழங்கப்படும' என தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .