2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றோரின் வாழ்வதாரத்துக்கு உதவுமாறுகோரி மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், சுக்ரி, ஜிப்ரான்)

இலங்கை இராணுவத்தில் கடந்த காலங்களில் கடமையாற்றியவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட 'மக்கள் மேம்பாட்டு தொண்டர் அமைப்பின்' உறுப்பினர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருமாறும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுமாறும் கோரும் மகஜரொன்றினை அந்த அமைப்பினர் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத்திடம் கையளித்தனர்.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பிரதேசத்துக்கு விஜயம் செய்து பொது அமைப்புக்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைநிறைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போதே, அமைச்சரிடம் மேற்படி வேண்டுகோளினை மக்கள் மேம்பாட்டு தொண்டர் அமைப்பினர் முன்வைத்தனர்.

இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றோர் மற்றும் வேறு காரணங்களால் இராணுவத்திலிருந்து முறையாக விலகிக் கொண்டோரை உறுப்பினர்களாகக் கொண்ட - மக்கள் மேம்பாட்டு தொண்டர் அமைப்பானது, காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

பொது மக்களுக்கான சேவையினை இலக்காகக் கொண்டு செயற்படும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஏராளமானோர் தற்போது நிரந்தரமான தொழிலின்றியும் வருமானமில்லாமலும் கஷ்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மேற்படி அமைப்பின் உறுப்பினர்களுக்கு நிரந்தர தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருமாறும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுமாறும் கோருகின்ற மகஜரினை அமைப்பின் தலைவர் பி.ஏ.அஸீஸ் மற்றம் பொருளாளர் எஸ்.ஏ.எம். பாறூக் ஆகியோர் இணைந்து அமைச்சரிடம் கையளித்தனர்.

இவர்களின் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ஹாபிஸ் நஸீர்ளூ தொழில் நடவடிக்கையொன்றினை ஆரம்பிப்பதற்குரிய முறையான ஒரு திட்ட அறிக்கையொன்றினை தயாரித்து தன்னிடம் விரைவில் வழங்குமாறு தெரிவித்தார்.

அதேவேளை, இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு தனது அமைச்சினூடாக வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து காத்தான்குடி – பாலமுனை கிராமத்துக்குச் சென்ற அமைச்சர்ளூ பள்ளிவாயல்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள தேவைகள் பற்றிக் கேட்டறிந்து கொண்டதோடு, மீனவர் அமைப்புக்களின் உறுப்பினர்களையும் சந்தித்தார்.

இதனையடுத்து, பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்விலும் அமைச்சர் கலந்து கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .