2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கிரான் மகா வித்தியாலயத்திற்கான இணையத்தளம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

கிரான் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக்கான இணையத்தள ஆரம்ப நிகழ்வு இன்று மகா வித்தியாலய சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத் தலைவர் வை.ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மீள்குடியேற்றப் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவிந்திரன், கிரான் மகா வித்தியாலய அதிபர் பி.ஜே.ஜெயவிரரெட்ணம், கிரான் விவேகானந்தா வித்தியாலய அதிபர் எஸ்.கே.கமலசேகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .