2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியளிக்கும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வும் மட்டக்களப்பில் நடைபெற்றன

மட்டக்களப்பு தன்னாமுனையில் உள்ள மியானி மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வுகளை கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்தன.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியளிக்கும் சமூக சேவையாளர்கள் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இதில் விசேட தேவையுடைய மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .