2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆடைகள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


மட்டக்களப்பில் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்ட  ஆணின் ஆடைகள் சிலவற்றையும் மற்றும் ஒரு சோடி காலணியையும் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்டுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிச்நகர் ரயில் வீதிக்கு அருகிலேயே இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்ட இந்த ஆடைகளும் காலணியும் மீட்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் இவற்றை மீட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் நிர்வாகப் பொறுப்பதிகாரி கே.ஜீ.சந்திரசேகர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .