2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பசளை தயாரிக்கும் கொள்கலன்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு பசளை தயாரிக்கும் கொள்கலன்கள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் இவை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி மத்திய கல்லூரி, ஏறவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை, ஒல்லிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயம், காங்கேயனோடை அல் அக்சா வித்தியாலயம், மட்டக்களப்பு விவேகானந்தா பெண்கள் பாடசாலை, மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி, உட்பட 12 பாடசாலைகளுக்கு இந்த பசளை தயாரிக்கும் கொள்கலன்கள் வழங்கப்பட்டன.
மூன்று கொள்கலன்கள் வீதம் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பனருமான சல்மா ஹம்சா, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.செயினுதீன், பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, பாடசாலைகளின் தோட்ட நடவடிக்கைகளுக்காக இந்த பசளை தயாரிக்கும் கொள்கலன்கள் வழங்கப்பட்டதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பனருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .