2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

சாதனையாளர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,கே.எஸ்.வதனகுமார்,ஜிப்ரான்)


மட்டக்களப்பில் கல்விச் சாதனையாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு  மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் பவளக்காந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.இ.போல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 2011ஆம் ஆண்டு மட்டக்களப்பு வலயத்தில் கல்வியில் சாதனைகளை நிகழ்த்திய மாணவர்கள் மற்றும் அதற்கு பொறுப்பான பாடசாலை அதிபர்கள் பதக்கம் அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .