2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'இடர் முகாமைத்துவத்துக்கு ஈடு கொடுக்கும் மீள் எழும் நகரம்' பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

இடர்களுக்கு முகம் கொடுத்து மீள் எழும்பக் கூடிய நகரத்தை உருவாக்கும் செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செயற்திட்டத் தயாரிப்பு பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையுடன் எறாவூர் நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இடமபெற்ற இந்தப் பயிற்சிப்பட்டறையில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, பிரக்டிகல் அக்ஸன் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் நுவான் மாதவ ஆராச்சி, இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஆலோசகர் யூ. டபிள்யூ. எல். சந்திரதாச, மட்டக்களப்பு இடர் முகாமைத்துவ நிலைய உதவி இணைப்பாளர் ஏ.எம்.எம். கஸீர் உட்பட ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் அனைத்துக் கிராம சேவை உத்தியோகத்தர்களும் திணைக்கள தலைவர்களும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .