2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

டெங்குநோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  மீராவோடை மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் டெங்குநோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேசசபை உறுப்பினர் எல்.ரீ.எம்.புர்க்கான், மீராவோடை மேற்கு கிராம அலுவலக உத்தியோகஸ்த்தர், ஓட்டமாவடி பொதுச்சுகாதார பரிசோதகர்கள், வாழைச்சேனை பொலிஸார், சிவில் பாதுகாப்புக்குழுவினர் ஆகியோர் பங்கெடுத்தனர்.

மீராவோடை மேற்கு சிவில் பாதுகாப்புக்குழு, எஸ்கோ நிறுவனம், ஆசிய அமைப்பின் அனுசரணையில் இவ்விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது டெங்கு நுளம்பால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .