2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மண், கிறவல் ஏற்றிய நால்வர் கைது

Super User   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் மற்றும் கிறவல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் நான்கு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாழைச்சேனை, சந்தியாமடு ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிய இரண்டு உழவு இயந்திரங்களும் நாவலடி பிரதேசத்தில் கிறவல் ஏற்றிய இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இந்த வாகனங்களின் சாரதிகள் நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்களையும் வாகனங்களையும் இன்று வாழைச்சேனை நீதவான் நிதிமன்ற நீதிபதி முன்னிலையில் அஜர்படுத்தப்படவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஏ.ஜயவீர தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .