2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

வயலுக்கு சென்றவர் வீதியில் மயங்கி உயிரிழப்பு

Super User   / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொடுவாமடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இன்று புதன்கிழமை வயலுக்கு சென்று கொண்டிருந்த விவசாயி மாரடைப்பு காரணமாக வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மரணித்தவர் மட்டக்களப்பு றொசைறோ ஒழுங்கையைச் சேர்ந்த 64 வயதான பொன்னுத்துரை நடேசமூர்த்தி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இன்று காலை மட்டக்களப்பிலுள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வயல் அமைந்துள்ள மாவடி ஓடையை நோக்கி சென்று கொண்டிருக்கும் வழியில் கொடுவாமடு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் தடுமாறி திடீரென வீதியில் விழுவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக அருகிலுள்ள செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்துள்ளதாக விசாரணையில் nதிரிவிக்கப்பட்டது.

வைத்திய அதிகாரி கே.சுகுமார் முன்னிலையில் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மாரடைப்பால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளிக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .